89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “அப்பா வர்றாரு... பாடம் படி...” - டிவி பார்க்கும் சிறுமியை உஷார்ப்படுத்திய நாய் | வைரல் வீடியோ

“அப்பா வர்றாரு... பாடம் படி...” - டிவி பார்க்கும் சிறுமியை உஷார்ப்படுத்திய நாய் | வைரல் வீடியோ

ஒரு நாய்க்கு சிறுமிக்கும் இருக்கும் இணையில்லாத அன்பும் புரிதலும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னை மறந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும் பள்ளிச் சிறுமியை 'அப்பா வருகிறார் டிவியை அணைத்துவிட்டு படி' என நாய் ஒன்று எச்சரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பழைய வீடியோவை Yoda4ever என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட, அது இப்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

சுமார் 25 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வீடு ஒன்றின் வரவேற்பறையிலிருக்கும் சோபாவில் அமர்ந்த படி, பள்ளிச் சிறுமி ஒருவர் சீருடையுடன் டிவி பார்த்துக் கொண்டிக்கிறார். அவளின் எதிரே ஒரு ‘டீ பாய்’ இருக்கிறது. அதன்மேல் பாடப் புத்தகம் விரித்து வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து பெரிய திரை டிவி ஒன்று இருக்கிறது. டிவிக்கும் இடையில் தரையில் 28 என்ற எண் கொண்ட சட்டை அணிந்தபடி ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் ஒன்று படுத்திருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wum2EbN
via IFTTT