ஒரு கனவைப் போல இருக்கிறது பழைய நினைவுகளின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்... அவை வாழ்வின் திரும்ப வராத எங்கோ மறைந்துபோன காலங்களாக மாறிவிட்டன. அவ்வப்போது நினைத்து ஏங்க வைப்பனவாகவும் அவை அமைந்துவிட்டன. அதென்னமோ... தீபாவளியைவிட தீபாவளி முடிந்த பின்னர் ஒரு மாதமும் சிலநாட்களும் கடந்தபிறகு வரும் தீபத் திருநாள்தான் எனக்கு நினைத்து மகிழ உகந்த ஒன்றாக நினைவின் சாளரத்தில் தங்கியுள்ளது.
ஒருகூடை நிறைய அகல்கள் எங்கள் வீட்டிலிருக்கும். பழைய அகல்களோடு ஆண்டுக்கு ஆண்டு புதிய அகல்கள் கொஞ்சமும் சேர்ந்திருக்கும். அவற்றையெல்லாம் தாழ்வாரத்தில் சமையல் அறை போகும் வழியில் எடுத்துவைத்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்து எல்லாவற்றிலும் அம்மா எண்ணெய் ஊற்றுவார். பஞ்சு திரியை சின்னதாக சுருட்டி சுட்டி கொடுக்க அக்கா ஒவ்வொன்றாக எண்ணெய் நிறைந்த விளக்கேற்றும் வகையில் அகலில் பொருத்தி வைப்பார். பின்னர் சாமி அறையில் மாவிளக்கு மாவில் விளக்கேற்று படைத்து சாமி கும்பிட்டுவிட்டு அனைத்து அகல் விளக்குகளிலும் தீபம் ஏற்றுவோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ka62Fv5
via IFTTT