89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இந்தியாவின் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

இந்தியாவின் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கிய ஹைதராபாத் தொழிலதிபர்

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபரான நசீர் கான், இந்தியாவில் விலை உயர்ந்த சூப்பர் காரை வாங்கியுள்ளார். அவர் மெக்லாரன் 765 LT ஸ்பைடர் எனும் காரை வாங்கியுள்ளார். இந்த காரை இந்தியாவில் வைத்துள்ள ஒரே நபரும் அவர்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்திலான இந்த காரின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தடபுடலாக வரவேற்பு கொடுத்துள்ளார் நசீர். கார் பிரியரான நசீரிடம் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, ஃபோர்டு, லாம்போகினி நிறுவன கார்கள் உட்பட பல விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளதாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7GaXhVO
via IFTTT