89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அதிக பக்தர்கள் வருகை: 2-வது இடம் பிடித்த திருப்பதி ஏழுமலையான் கோயில்

அதிக பக்தர்கள் வருகை: 2-வது இடம் பிடித்த திருப்பதி ஏழுமலையான் கோயில்

ஹைதராபாத்: ஓயோ நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் எனும் பெயரில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. இதில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் பயணம் செய்த திருத்தலம் பட்டியலில் காசி விஸ்வநாதர் கோயில் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்து திருப்பதி, பூரி ஜெகந்நாதர், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் ஹரித்வார் ஆகிய கோயில்கள் இடம் பெற்றுள்ளன.

கரோனா பரவலை தொடர்ந்து கோயில்கள் திறக்கப்பட்ட பின்னர், இந்த ஆண்டு, சீரடி, ரிஷிகேஷ், மதுரா, மகா பலேஸ்வர், மதுரை ஆகிய ஆன்மீக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஓயோ நிறுவன ஓட்டல்களில் பக்தர்கள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்த அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8jfGnk7
via IFTTT