பழங்காலத்தில் மக்கள் புத்தாண்டை வேப்ப இலையில் வெல்லம் சேர்த்து கொண்டாடினர். எனவே, புத்தாண்டில் நீங்கள் முதலில் சாப்பிடுவது கசப்பு மற்றும் இனிப்பு கலவையாகும். பின்னர் நீங்கள் காலண்டரைப் பார்க்கிறீர்கள், அது அன்றைய நேரம், தேதி, யோகங்கள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. எனவே, இனிப்பு மற்றும் கசப்பை ஏற்றுக்கொள்வதுடன் நேரத்தைப் பற்றிய அறிவு ஒருவரை முன்னேறுவதற்கு மகத்தான பலத்தை அளிக்கிறது.
வாழ்க்கையில் நீங்கள் கசப்பானதாகக் கருதுவது உங்களுக்கு ஓரளவு ஆழத்தைக் கொடுத்தது, உங்களை வலிமையாக்கியது. எனவே, உங்கள் வாழ்க்கையில் வந்த சவால்கள் எங்கோ உங்களை வலுவாகவும், ஆற்றல் மிக்கவராகவும் வளர்த்து, வாழ்வின் இனிமை உங்களுக்கு ஆறுதலைத் தருகிறது. வாழ்க்கை கசப்பாக இருந்தால், அது தங்குவது இல்லை. வாழ்க்கை இனிமையாக இருந்தால் ஆழம் இல்லை. எனவே, வாழ்க்கை என்பது இரண்டின் கலவையாகும், அதுவே காலத்தின் இயல்பும் கூட.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kgI1Chb
via IFTTT