திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) அணில்குமார் சிங்கால் நேற்று காலை வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர், வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில் மட்டுமே சொர்க்க வாசல் திறந்திருக்கும். அதன் பின்னர், அறங்காவலர் குழுவில் விவாதித்து 10 நாட்கள் வரை மட்டுமே சொர்க்க வாசலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆண்டும், 8 லட்சம் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் செய்விக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ougBQDE
via IFTTT