89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 1,400 கோயில்கள் கட்டும் ஜெகன் அரசின் திட்டத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் உதவி

1,400 கோயில்கள் கட்டும் ஜெகன் அரசின் திட்டத்துக்கு திருப்பதி தேவஸ்தானம் உதவி

அமராவதி: ஆந்திரா முழுவதும் சுமார் 1,400 கோயில்கள் கட்ட ஜெகன்மோகன் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் உதவ முன்வந்துள்ளது.

இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான கே. சத்தியநாராயணா நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் பின்தங்கிய வகுப்பினர், மீனவர்கள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 1,060 இந்து கோயில்கள் கட்ட ஆந்திர அரசு தீர்மானித்துள்ளது. இதுதவிர மேலும் 330 கோயில்கள் கட்டித்தர ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமரசதசேவா அறக்கட்டளை முன்வந்துள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் அனைத்து கோயில்களையும் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T2Z0sxt
via IFTTT