சின்னக் குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்குமான பிணைப்பு என்பது உலகத்தினை அனைத்து இணைகளையும் மீறய பிரபஞ்ச பேரதிசயம். பெற்றோர், உடன்பிறந்தவர்களை விட செல்லப் பிராணிகளிடம் இரண்டறக்கலந்து விடுவதில் சின்னக் குழந்தைகளுக்கு நிகர் சின்னக் குழந்தைகளே..! அதிலும் கொஞ்சம் சுட்டித்தனம் சேர்ந்துவிட்டால் பார்ப்பவர்களின் இதயங்கள் கொள்ளைப் போவது சர்வ நிச்சயம். இந்த மாதிரியான நம்பமுடியாத சந்தர்ப்பங்களில் அந்த செல்லப் பிராணிகளின் அசாத்திய பொறுமையும், குழந்தைகளிடம் அடிபணியும் பண்பும் வார்த்தைகளுக்குள் அடங்கிவிடாதது.
முரட்டு ஜல்லிக்கட்டுக் காளை அசாதாரணமாக இழுத்துச் செல்லும் குழந்தை, படுபயங்கரமான நாயின் காதுகளை இழுத்து விளையாடும சுட்டி, கன்றுக்குட்டியுடன் சரிமல்லுகட்டும் சிறுவன் என சமூக வலைதளம் தன்னுள் அடைகாக்கும் இத்தகைய வீடியோக்கள் ஏராளம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது இந்தச் சுட்டிப் பெண்குழந்தை பூனைக்கு படம் வரையச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tndh0fP
via IFTTT