89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : T20 WC | IND vs NED: மைதானத்தில் தோழியிடம் காதலைச் சொன்ன இளைஞர்

T20 WC | IND vs NED: மைதானத்தில் தோழியிடம் காதலைச் சொன்ன இளைஞர்

சிட்னி: இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்திருந்த ரசிகர் ஒருவர் தனது தோழியின் மனதை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தி உள்ளார். அவரது செயல் அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டுள்ளது என்றே தெரிகிறது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து 179 ரன்களை சேர்த்தது. அந்த இலக்கை தடுமாற்றத்துடன் விரட்டிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. அதனால், 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் ரோகித், கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் என மூவரும் அரை சதம் விளாசி இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vzK0U4J
via IFTTT