89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சின்சோரோ: எகிப்தைவிட பழமையான மம்மிகள் - பின்புலம் என்ன?

சின்சோரோ: எகிப்தைவிட பழமையான மம்மிகள் - பின்புலம் என்ன?

மம்மிகள் என்றால் எகிப்தின் மம்மிகள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். சிலர் மம்மிகளின் பிறப்பிடமும் எகிப்துதான் என்றும் நினைப்பது உண்டு. ஆனால், எகிப்தின் மம்மிகளைவிட சின்சோரோ மம்மிகள்தான் உலகின் பழமையாக மம்மிகள் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆம், எகிப்தின் மம்மிகள் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தவை என்றால், சின்சோரோ மம்மிகள் 5,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆதாரங்களுடன் கூறப்படுகிறது.

யார் இந்த சின்சோரோ மக்கள்? - தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்குப் பகுதிகளிலும், பெருவின் தென் பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள்தான் இந்த சின்சோரோ மக்கள். இம்மக்கள்தான் இந்த பிராந்தியத்தில் முதன்முதலில் இறந்த உடல்களைப் பதப்படுத்தும் முறையை கொண்டு வந்தவர்கள் என்கிறார் மானுடவியலாளர் பெர்னார்டோ அர்ரியாசா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6i7EXMJ
via IFTTT