89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ரயில் பயணி ஆர்டர் செய்த சமோசாவில் காகிதம்: ஐஆர்சிடிசி-யை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ரயில் பயணி ஆர்டர் செய்த சமோசாவில் காகிதம்: ஐஆர்சிடிசி-யை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

லக்னோ: பாந்த்ரா டெர்மினஸ் - லக்னோ சந்திப்பு வாராந்திர ரயிலில் பயணித்த பயணி ஒருவர் பயணத்தின்போது ஐஆர்சிடிசி பேன்ட்ரி விநியோகித்த சமோசாவை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் மஞ்சள் நிற காகிதம் இருப்பதை கவனித்துள்ளார். உடனடியாக அதை அப்படியே தனது செல்போன் கேமராவில் படம் பிடித்து, அது குறித்து ட்வீட் செய்துள்ளார் அவர். அதோடு அதில் ஐஆர்சிடிசி-யை டேக் செய்துள்ளார். அதற்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர்.

‘அந்நியன்’ படத்தில் அம்பியாக வரும் விக்ரம் ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது தான் சந்தித்த சங்கடங்களை ‘டிடிஆர்’ என உரத்த குரலில் அவரை அழைத்து புகார் கொடுப்பார். கிட்டத்தட்ட இதுவும் அதேபோல ஒரு சம்பவம்தான். ஆனால், இந்தப் பயணி டிஜிட்டல் யுகத்தில் இருப்பதால் மிகவும் ஸ்மார்ட்டாக ட்வீட் மூலம் ஐஆர்சிடிசி உட்பட அனைவரது கவனத்திற்கும் எளிதாக இதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SBgdXQJ
via IFTTT