சென்னை: ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, இம்மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும், சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேலும், நாள் முழுவதும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து, பெருமளை தரிசித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TfdGVA6
via IFTTT