89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருமலை

பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருமலை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை இம்முறை 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவைகளுடன் பிரம்மாண்டமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜர் இலவச சத்திரங்கள், விஷ்ணு நிவாசம், மாதவம், ஸ்ரீநிவாசம் என அனைத்து தங்கும் விடுதிகளிலும் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, மலைப்பாதையில் சாலை சீரமைப்பு பணிகள், தடுப்புச் சுவர்கள், இரும்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளும், திருமலையில் தங்கும் விடுதிகளில் குடிநீர், சுடுநீர் வசதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qZUrC8G
via IFTTT