89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி முதல் சிகிச்சை வரை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி வழிகாட்டுதல்

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி முதல் சிகிச்சை வரை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி வழிகாட்டுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறி முதல் சிகிச்சை வரை பல்வேறு தகவல்களை விளக்குகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்றால் என்ன? - இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று எப்படி வேண்டும் என்றாலும் இந்த வைரஸ் காய்ச்சல் வரலாம். இந்தக் காய்ச்சல் பாதிப்பு சில நேரங்களில் தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சல் தொடங்கி தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்படலாம். 80 சதவீத பேருக்கு இது லேசான காய்ச்சலாகத்தான் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iYxDOB1
via IFTTT