89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஐபோன் 14 புரோ வாங்க துபாய்க்கு சென்ற இந்தியர்: டிக்கெட்டுக்காக ரூ.40,000 செலவு

ஐபோன் 14 புரோ வாங்க துபாய்க்கு சென்ற இந்தியர்: டிக்கெட்டுக்காக ரூ.40,000 செலவு

துபாய்: ஐபோன் 14 புரோ ஸ்மார்ட்போன் வாங்க இந்தியர் ஒருவர் துபாய்க்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்திற்காக விமான டிக்கெட் மற்றும் விசா போன்றவற்றுக்காக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அவர் செலவு செய்துள்ளார். ஐபோன் மீது அவர் கொண்டுள்ள தீவிர மோகத்தின் வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.

சினிமா படங்களில் கதாநாயகர்கள் சாத்தியமில்லாத சில பயணங்களை மேற்கொள்ளும் காட்சிகளை நாம் பார்த்துள்ளோம். தாமிரபரணி படத்தில் விஷால், வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா என சில காட்சிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதே போலதான் இந்த இந்தியரும் பயணம் செய்துள்ளார். என்ன இவர் ஐபோன் மீது கொண்ட மோகத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dDtJEYT
via IFTTT