89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 10,000 கி.மீ... பைக்கில் லடாக் பயணம்: செவித்திறன் குறைந்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞரின் சாதனை

10,000 கி.மீ... பைக்கில் லடாக் பயணம்: செவித்திறன் குறைந்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞரின் சாதனை

மதுரை: 10,000 கி.மீ. தூரம் தனியாக பயணம் செய்து, பல்வேறு சவால்களையும், சிரமங்களை சந்தித்து லடாக் சென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

செவித்திறன் குறைந்த மதுரை மாற்றுத்திறனாளி இளைஞர் குங்கும சீனிவாசன். இவர் 10,000 கி.மீ. தூரத்துக்கும் மேலாக தனியாக மோட்டார் சைக்கிள் பயணம் செய்து காஷ்மீர் தாண்டி லடாக் பகுதியில் உள்ள உம்ல்லிங் லா என்ற இடத்தை அடைந்து சாதனைப் படைத்துள்ளார். இவர், கடந்த ஜூலை 3ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலை பாதை வழியாக லடாக் பகுதியை 24 நாட்களில் சென்றடைந்துள்ளார். இந்த இடம் உலகிலேயே 19,024 அடிக்கு மேலான உயரமான மிகவும் ஆபத்தான பாதையைக் கொண்டது. பாறைகளும், பள்ளங்களும், நீரோடைகளும் மிகுந்த குளிரான இடமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bD7oBGc
via IFTTT