89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாற்றுத்திறனாளிகள் நலன் | மண்டல அளவிலும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்க வேண்டும். ஏன்?

மாற்றுத்திறனாளிகள் நலன் | மண்டல அளவிலும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்க வேண்டும். ஏன்?

மத்திய அரசின் சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்களையும் பரிந்துரைகளையும் ஆகஸ்ட் 28-க்குள் இணையவழியில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2021-க்கும் நடப்பாண்டுக்கும் இணைத்து எதிர்வரும் டிசம்பர் 3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் சிறப்பாகப் பணிபுரியும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், அரசு சாரா அமைப்புகள் என 8 பிரிவுகளில் 10 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விருதுகள் தனி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RXgE3Q9
via IFTTT