89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பாலியல் துன்புறுத்தல் | ‘விழிப்புணர்வு இருப்பினும் புகார் அளிக்க தயக்கம்’ - சென்னை அரசுப் பள்ளி மாணவிகளும் ஆய்வு முடிவும்

பாலியல் துன்புறுத்தல் | ‘விழிப்புணர்வு இருப்பினும் புகார் அளிக்க தயக்கம்’ - சென்னை அரசுப் பள்ளி மாணவிகளும் ஆய்வு முடிவும்

பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக வளர் இளம் பருவத்தினருக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், ஒரு சிலர்தான் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தைரியமாக வெளியே சொல்கின்றனர். பலரும் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியே செல்வது இல்லை.

இந்நிலையில், சென்னையில் உள்ள அரசு மேல்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் உடல் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவ துறை மருத்துவர்களான ஜெயஸ்ரீ, சித்ரா, சுதர்சனி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வானது தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CzgHRId
via IFTTT