89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘புஷ்பா’ டிரேட்மார்க் போஸில் விநாயகர் சிலை: நெட்டிசன்கள் கலவையான விமர்சனம்

‘புஷ்பா’ டிரேட்மார்க் போஸில் விநாயகர் சிலை: நெட்டிசன்கள் கலவையான விமர்சனம்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக பந்தல் அமைத்து வைக்கப்படும் மெகா சைஸ் விநாயகர் சிலைகள் அதன் பிரம்மாண்டத்தின் காரணமாக கவரும். சமயங்களில் அந்த பந்தல்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழக்கமான விநாயகராக இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அது பலரையும் ஈர்க்கும்.

அந்த வகையில் அமைந்துள்ளது ‘புஷ்பா’ படத்தின் டிரேட்மார்க் போஸ் கொடுக்கும் விநாயகர் சிலை ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கெத்தாக ஒரு போஸ் கொடுத்திருப்பார். அதை அப்படியே விநாயகர் சிலையாக வடித்துள்ளனர் விநாயகர் சிலை வடிவமைப்பாளர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Z26F1YO
via IFTTT