89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஓவியர் அச்சுதன் கூடலூர்: உள்ளுணர்வின் தீபத்தைக் கையிலேந்திப் பயணித்தவர்

ஓவியர் அச்சுதன் கூடலூர்: உள்ளுணர்வின் தீபத்தைக் கையிலேந்திப் பயணித்தவர்

ஓவியர் அச்சுதன் கூடலூர், தனது 77-வது வயதில் மறைந்த செய்தி மனதை வதைக்கிறது. இவர் இந்தியா முழுவதும் 23 தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியவர். நவீன அரூப ஓவியங்களைத் தீட்டுவதில் தனக்கென ஒரு சிறப்பான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர். கேரளத்தில் பாரதப்புழா ஆற்றங்கரையில் வளர்ந்தவர். மலையாள எழுத்து, தமிழ் எழுத்து ஆகிய இரண்டோடும் நெருக்கம் கொண்ட ஓர் ஓவியர்.

காது மறைத்து வளர்ந்த சிகை, அடர்ந்த தாடி, மீசை, உள்ளுக்குள் ஏதோ ஒரு கேள்வியோடு பார்க்கும் பார்வை, மிருதுவாக வெளிவரும் வார்த்தைகள், தரைக்கு வலிக்காமல் ஒரு நடை என்று வாழ்ந்த அச்சுதன் கூடலூர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AbCjtSq
via IFTTT