89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருதால் அங்கீகாரம்... யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

WHO-ன் ‘குளோபல் ஹெல்த் லீடர்ஸ்’ விருதால் அங்கீகாரம்... யார் இந்த ஆஷா பணியாளர்கள்?

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்களில் 70 முதல் 80 சதவீத பேர் பெண்கள்தான். உயர் சிறப்பு மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரை அனைவரும் பெண்கள்தான். இவர்களில் கடைநிலைப் பணியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பது இல்லை. மிகவும் குறைவான ஊதியத்தில் அதிக நேரம் பணியாற்றும் இந்தக் கடைநிலைப் பணியாளர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

உலக நிறுவனத்தின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் உள்ள 10 லட்சம் ஆஷா பணியாளர்களுக்கு உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரின் 'குளோபல் ஹெல்த் லீடர்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பானப் பங்களிப்பு, பிராந்திய அளவில் சுகாதார சேவைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவர்களுக்கு இந்த விருதை 2019-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் வழங்கி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9NS3kBW
via IFTTT