89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சர்வதேச தேநீர் தினம் | சூடான தேநீரும்; ஐந்து ஆரோக்கிய நன்மைகளும்

சர்வதேச தேநீர் தினம் | சூடான தேநீரும்; ஐந்து ஆரோக்கிய நன்மைகளும்

இன்று (மே 21) சர்வதேச தேநீர் தினம். உள்ளத்தையும், உடலையும் உற்சாகமாக வைக்கின்ற உற்சாக பானம் தான் தேநீர். உள்ளூர் தொடங்கி உலக லெவலில் பிரசித்தி பெற்ற பானம் இது. சர்வதேச தேநீர் தினத்தன்று சூடான தேநீரும் அதன் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.

சாமானியர்கள் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் காலை, மாலை, பகல், இரவு என எந்நேரமும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் எனர்ஜி டானிக் தான் தேநீர். இப்படி உடல், பொருள், ஆவி, கலாச்சாரம் என நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது தேநீர். வீடு, அலுவலகம், நண்பர்கள் சந்திப்பு என எங்கு சென்றாலும் 'சூடா ஒரு டீ சொல்லுப்பா' என ஒரு குரல் ஒலிக்கும். அந்த குரலை எல்லோரும் அன்றாடம் கடந்து கொண்டு தான் இருக்கிறோம். இப்படி ஸ்ட்ராங்கா, லைட்டா, மீடியமா, சர்க்கரை கம்மியா என தேநீர் குறித்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QLRAhdD
via IFTTT