89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பப்பி லஹரியின் உயிரைப் பறித்த 'ஸ்லீப் அப்னியா'... இந்த உடல்நலப் பிரச்னையின் அடிப்படைத் தகவல்கள்

பப்பி லஹரியின் உயிரைப் பறித்த 'ஸ்லீப் அப்னியா'... இந்த உடல்நலப் பிரச்னையின் அடிப்படைத் தகவல்கள்

'ஸ்லீப் அப்னியா' என்னும் உடல்நலப் பிரச்னை காரணமாக இந்தியாவில் மட்டும் 5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்று உயிரிழந்த பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி கூட ’ஸ்லீப் அப்னியா’வால் பாதிக்கப்பட்டிருந்தாக மருத்துவத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்லீப் ஆப்னியா என்றால் என்ன? - தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறலைத்தான் இந்த மருத்துவ வார்த்தையில் கூறுகின்றனர். Obstructive Sleep Apnea என்பதை அமெரிக்க தேசிய மருத்துவ மையம் விளக்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர், ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும்போது அவரது மேல் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த நபருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூங்க முடியாமல் போகிறது. சில நேரங்களில் மூளையில் இருந்து தசைகளுக்கு சரியான சமிக்ஞைகள் செல்லாவிட்டாலும் ஸ்லீப் அப்னியா ஏற்படும். இதனை சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா எனக் கூறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uh01yVo
via IFTTT