89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி சோம வாரத்தில் ஈச தரிசனம்!  மாற்றமும் ஏற்றமும் தரும் மகேஸ்வர வழிபாடு! 

மாசி சோம வாரத்தில் ஈச தரிசனம்!  மாற்றமும் ஏற்றமும் தரும் மகேஸ்வர வழிபாடு! 


மாசி சோம வாரத்தில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாரைத் தரிசிப்போம். மாசி சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தால், சிக்கல்களைத் தீர்த்து வைப்பார். குழப்பங்களைப் போக்கி அருளுவார் என்பது ஐதீகம். மாசி சோம வார நன்னாளில், அற்புதமான வளர்பிறை திங்கட்கிழமையில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வோம். சிவனாருக்கு செவ்வரளியும் வில்வமும் சார்த்தி வேண்டிக்கொள்வோம். மனதின் குழப்பத்தையெல்லாம் போக்கியருளுவார் சிவபெருமான். துக்கங்கள் அனைத்தையும் நீக்கித் தந்து, புதியதொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்திடுவார் தென்னாடுடைய சிவனார்!

சோமவாரம் என்று திங்கட்கிழமையைச் சொல்லுவார்கள். சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம். திங்கள் என்றாலும் சந்திரன் என்றே பொருள். சந்திரனைப் பிறையெனச் சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3boT5Lr
via IFTTT