திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராஜருக்கு சந்தனம்படி களையும் அபிஷேகம் இன்று நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி ஆலயத்தில் மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு பெற்றது. மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பால் பாதுகாக்கப்படுகிறது. இங்கு மட்டும் ஆருத்ரா தரிசனத்துக்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையும் அபிஷேகமும் நடைபெறுவது சிறப்பாகும். இதைக்காணவும், ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் நடராஜர் சந்தனக்காப்பு இன்றி காட்சி தருவதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nYeMXZ
via IFTTT