89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஆராதனை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசிக்க ஏற்பாடு! 

திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு ஆராதனை; வீட்டில் இருந்தே நேரலையில் தரிசிக்க ஏற்பாடு! 

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு, சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நவக்கிரக ஹோமங்களும் நடைபெறுகின்றன. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த வழிபாட்டையும் பூஜையையும் வீட்டில் இருந்தே தரிசிக்கலாம். இந்த ஆராதனை வழிபாடுகளை இணையதள சேனலில் நேரலையில் ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கியமான தலங்களில் திருவொற்றியூர் திருத்தலமும் ஒன்று. திருவொற்றியூரில் அமைந்துள்ளது ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம். சனிப்பெயர்ச்சியையொட்டி இந்தக் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் 27ம் தேதி நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nKNVhX
via IFTTT