89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: கும்ப ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: கும்ப ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

கும்ப ராசி வாசகர்களே

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென்று வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல பரிசு, பாராட்டுகளைப் பெற்றுத் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ஆட்சிபெற்று ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுப் போன காரியங்கள் இனி விரைந்து முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3plH1zT
via IFTTT