89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: ரிஷப ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: ரிஷப ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

ரிஷப ராசி வாசகர்களே

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். இதுவரை கிட்டதட்ட மூன்றாண்டு காலமாக அஷ்டமத்தில் நின்று கொண்டு எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கித் தந்து, பல பிரச்சினைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் நமக்கேன் வம்பு என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டிருந்த உங்கள் மனத்தில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்களின் பாக்கியாதிபதியாகிய சனிபகவான் ஆட்சிபெற்றுச் சொந்த வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WQdlP7
via IFTTT