இஞ்சி ஊறுகாய்
தேவையான பொருட்கள்
இஞ்சி 1/4கிலோ
இஞ்சி 1/4கிலோ
மிளகாய்வற்றல் 50கிராம்
புளி 100 கிராம்
வெந்தயம் 2டீஸ்பூன்
கடுகு 25கிராம்
வெல்லம் சிறிதளவு
நல்லெண்ணெய் 1/2கப்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை இஞ்சியை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்குங்கள். புளி அரை கப் வெந்நீரில் ஊறவையுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாய் வறுத்தெடுங்கள், அதே எண்ணெயில் இஞ்சியை வதக்கி எடுக்கவும்
பிறகு வெறும் கடாயில் கடுகு, வெந்தயத்தை வறுத்தெடுங்கள்.வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஆறவையுங்கள். பிறகு இவற்றுடன் புளி, வெல்லம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்தெடுங்கள்.
கடைசியாக மீதமுள்ள எண்ணெயை தாளித்து சேர்க்கலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய்.