89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : Job 60 Plus | பெங்களூருவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற சீனியர்கள்

Job 60 Plus | பெங்களூருவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற சீனியர்கள்

பெங்களூரு: பெங்களுருவில் அண்மையில் நடைபெற்ற Job 60 Plus என்ற மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் ஆர்வத்துடன் 60 வயதை கடந்தவர்கள் பலர் பங்கேற்றனர். ஓய்வுக்கு பிறகு ஆக்டிவாக இருக்க, நிதி ரீதியாக யாரையும் சாராமல் இருக்கும் வகையில் இதில் பங்கேற்றுள்ளதாக பலரும் தெரிவித்திருந்தனர்.

பெங்களூருவின் சாந்தி நகரில் அமைந்துள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 30 நிறுவனங்கள் பங்கேற்றன. பொறியாளர், தொழில்நுட்ப வல்லுநர், சில்லறை வணிக பிரதிநிதிகள், அட்மின்கள் என பல்வேறு வேலைகளுக்கு இதில் ஆட் தேர்வு நடந்தது. நிகழ்விடத்தில் நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியான நபர்களுக்கு கையோடு ஆஃபர் லெட்டரும் வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tnLMsVN
via IFTTT