தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/43A06rR
via IFTTT