மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, பஞ்சமூர்த்திகள் கோயில் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினர். பின்னர், தருமபுரம்ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை லமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள், மங்கலவாத்தியங்கள் முழங்க ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. இதில், ஆதீனகட்டளை தம்பிரான் சுவாமிகள்மற்றும் பக்தர்கள் கலந்துகொண்ட னர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B1EoJaj
via IFTTT