கோவை: காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தேவை என்பது முக்கியம். ஏனெனில், மருந்து, மாத்திரைகள் சாப்பிடும்போது அதை தாங்கும் திறன் வேண்டும். மத்திய அரசின் 'நிக் ஷய் போஷன் யோஜனா' திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் சத்தான உணவு சாப்பிட, அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக செலுத்தப்படுகிறது.
காசநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிந்தால், அவர் பணியாற்றும் நிறுவனங்கள் பெரும்பாலும் அவர்களை வேலையைவிட்டு நீக்கிவிடுகின்றனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டு, அந்த குடும்பத்தினர் ஏழ்மைக்கு தள்ளப்படுகின்றனர். அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை, மாத்திரை, மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரும் ஆகும் போக்குவரத்து செலவு, குடும்பத்தை நடத்த தேவையான மாத செலவுகளை சமாளிக்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சிகிச்சை பெறும் காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் உதவித்தொகையை வழங்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/psNfGFc
via IFTTT