89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ராமநாதபுரம் | அன்னதானத்திற்காக ஒரு ஊரையே தானமாக வழங்கிய சேதுபதி மன்னர் - 17ம் நூற்றாண்டு கல்வெட்டில் தகவல்

ராமநாதபுரம் | அன்னதானத்திற்காக ஒரு ஊரையே தானமாக வழங்கிய சேதுபதி மன்னர் - 17ம் நூற்றாண்டு கல்வெட்டில் தகவல்

ராமேசுவரம்: அன்னதானத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதைத் தெரிவிக்கும் கி.பி.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சே.கொடிக்குளம், கழுநீர்பாலமுருகன் கோயில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பேரையூர் அரசுப் ஆசிரியர் கு.முனியசாமி கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து படித்து ஆய்வு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fYhNbJd
via IFTTT