தென்காசி: விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், ஆள் கூலியும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பணியை முழுநேரத் தொழிலாக பொறியியல் பட்டாதாரி ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.
காலத்துக்கேற்ப தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாற்றங்கள் விவசாயத்தில் நடைபெற்று வருகிறது. மாடு வைத்து உழுத காலம் மலையேறிவிட்டது. டிராக்டர் மூலம் சிறிய கலப்பை, பெரிய கலப்பை, ரொட்டேட்டர் என பல்வேறு வகையான கலப்பைகள் மூலம் நிலத்தை உழவு செய்து விவசாயத்துக்கு நிலத்தை தயார்படுத்துகின்றனர். விதைப்புக்கு உபகரணம், நடுவதற்கு இயந்திரம், களையெடுக்க இயந்திரம், களையை கட்டுப்படுத்த மருந்துகள், அறுவடைக்கு இயந்திரம் என தேவைக்கேற்ப தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ynqo1ZN
via IFTTT