நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை ஜமாத் சார்பில் நேற்று மாலை நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் நடைபெற்றது. பள்ளிவாசலில் தொடங்கிய இந்த கொடி ஊர்வலம், சாலா பள்ளி தெரு, யாகூசைன் பள்ளி தெரு, பெரிய கடைத் தெரு, மாவட்ட அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், காடம்பாடி, நாகூர் செய்யது பள்ளி தெரு ஆகியவற்றின் வழியாக நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலில் நிறைவடைந்தது.
பல்லக்குகளில் இருந்து புனித கொடிகள் இறக்கப்பட்டு, நாகூர் தர்காவில் பாத்திஹா ஓதப்பட்டு 5 மினராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kijsTgN
via IFTTT