89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : “கொஞ்சம் காரமா கொடுங்க” - தமிழில் உணவு ஆர்டர் செய்த அமெரிக்க யூடியூபர் | வைரல் வீடியோ

“கொஞ்சம் காரமா கொடுங்க” - தமிழில் உணவு ஆர்டர் செய்த அமெரிக்க யூடியூபர் | வைரல் வீடியோ

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் அங்குள்ள உணவகத்தில் தமிழில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதற்காக அந்த உணவக உரிமையாளர் அவருக்கு உணவை இலவசமாக வழங்கியுள்ளார். அந்த வீடியோ இப்போது பரவலாக கவனம் ஈர்த்து வருகிறது. என்ன நடந்தது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.

இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப சாதனங்களின் துணை கொண்டு சாமானியர்களும் பல்வேறு வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதில் பிரதானமானது யூடியூப். இதில் ரெகுலராக வீடியோ பதிவு செய்து வருபவர்கள் யூடியூபர் என அறியப்படுகிறார்கள். அவர்கள் ஒருவர் தான் சியாமானிக் (Xiaomanyc). அமெரிக்காவை சேர்ந்தவர். யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அவர் தான் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UvCAiDy
via IFTTT