89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இரவில் தூக்கம் வருவதில்லையா? - விளைவுகளும் சித்த மருத்துவ தீர்வும்

இரவில் தூக்கம் வருவதில்லையா? - விளைவுகளும் சித்த மருத்துவ தீர்வும்

கடந்த ஒரு வருடமாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறேன். இப்போது அந்தப் பிரச்சினை தீவிரமடைந்துவிட்டது. என்னால் பல நாட்களுக்கு இரவில் தூங்க முடிவதில்லை. சில நேரம் மயங்கிப் போகிறேன் (hallucinated). ஆனால், என் அறிவு மட்டும் விழிப்புடனே இருக்கிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து நான் எப்படி விடுபடுவது? - கே.அருணாசலம், மின்னஞ்சல்

மருத்துவர் கு.சிவராமன்: மூளை தொய்வின்றிப் பணிபுரியவும் உடல் வேலை செய்யவும் நல்ல உடற் பயிற்சியும் சரியான அளவில் உறக்கமும் மிகவும் அவசியம். உங்களது பிரச்சினை தீவிரமாக இருப்பதால், நவீன உறக்கமுண்டாக்கும் மருந்துகளின் உதவியைச் சில காலம் பெறுவது நல்லதுதான். கூடவே சித்த மருத்துவ, பாரம்பரிய அனுபவ உதவிகளைப் பெறு வதும் மிக அவசியம். அது நாளடைவில் எவ்வித மருத்துவ உதவியுமின்றி, உங்களை உறங்க வைக்க வழிகாட்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HOeEZ1K
via IFTTT