89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒரே கல்லில் 35 டன் எடையில் யானை, குதிரை கற்சிலைகள் வடிவமைப்பு: அய்யனார் கோயிலில் பிரதிஷ்டை

ஒரே கல்லில் 35 டன் எடையில் யானை, குதிரை கற்சிலைகள் வடிவமைப்பு: அய்யனார் கோயிலில் பிரதிஷ்டை

ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் இன்று (செப்.2-ம் தேதி) பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், கிராம மக்கள் கடந்த 2017-ம் ஆண்டு கும்பாபிஷேகத் திருப்பணிகளைத் தொடங்கினர். இதில் ரூ.29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதத்தொகை கிராமப் பொதுமக்கள் சார்பிலும் திரட்டப்பட்டு சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mTjgBh
via IFTTT