89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஆந்திராவில் 6 வயது சிறுவனுக்கு நின்ற இதயத்தை சிபிஆர் செய்து காப்பாற்றிய பெண் மருத்துவர்: குவியும் பாராட்டு

ஆந்திராவில் 6 வயது சிறுவனுக்கு நின்ற இதயத்தை சிபிஆர் செய்து காப்பாற்றிய பெண் மருத்துவர்: குவியும் பாராட்டு

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடா ஐயப்ப நகரை சேர்ந்த சாய் (6) வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி எறியப்பட்டார். இந்த அதிர்ச்சியில் பேச்சு, மூச்சின்றி சாய் கீழே விழுந்து விட்டார். இதனை கண்ட சிறுவனின் தந்தை அலறியபடி ஓடிச்சென்று, தனது மகனை தோள் மீது தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார்.

டாக்டர் ரவளி, சிறுவன் சாய் அதே சமயம் விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ரவளி காரில் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு தந்தை மகனை தோளில் சுமந்தபடி தூக்கி செல்லும் காட்சியை பார்த்து, காரில் இருந்து இறங்கி நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HarmMDL
via IFTTT