போடி: போடிமெட்டு அருகே உள்ள ஆனையிரங்கல் அணைப் பூங்காவில் உடைந்து விழுந்த மரங்களை கலைநயமிக்கதாக மாற்றி அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாய் கவர்ந்து வருகிறது.
தேனி மாவட்டம் போடிமெட்டில் இருந்து 25 கிமீ. தூரத்தில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆனையிரங்கல் அணை அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே யானை பள்ளத்தாக்கு வியூ, நறுமணப்பொருட்கள் விற்பனை மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் காற்றில் உடைந்து விழுந்த மரங்களைக் கொண்டு கலைநுணுக்கமான வடிவமைப்புகளை உருவாக்கி உள்ளனர். இதற்காக காய்ந்த மரங்களை பாலீஷ் செய்து பூங்காவின் பல பகுதிகளிலும் அழகாக காட்சிப்படுத்தி உள்ளனர். இதேபோல் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்காக மரத்திலான தரைமட்ட இருக்கைகளும் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TkLb3aD
via IFTTT